ஜனாதிபதி பயணிக்கும் வீதி என கூறி பால்மா வாங்குவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த மக்களை பொலிஸார் விரட்டியடித்துள்ளனர்.
100க்கும் மேற்பட்ட பொலிஸார் வந்து பால்மாவுக்கு நீண்ட வரிசையில் நிற்க வேண்டாம் என எச்சரித்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் நுகேகொட மிரிஹான பிரதேசத்திலுள்ள தேசிய பால்மா கடையொன்றில் வர்த்தகத்தை கட்டுப்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
குறித்த வீதியில், பல நாட்களாக நீண்ட வரிசையில் நின்றவர்கள் நேற்று நிற்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது