புதுவருடத்தை முன்னிட்டு அடுத்த சில நாட்களுக்கு செல்லுபடியாகும் புதிய சுகாதார வழிகாட்டில் இன்று வெளியிடப்படும் என சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம், வைத்திய கலாநிதி ஹேமந்த ஹேரத் கூறியுள்ளார்.
இதன்படி நாளைய தினம் விருந்துபசாரம் அல்லது சிறியளவான விருந்துபசாரங்களை முன்னெடுக்கும்போது சுகாதார ஆலோசனைகளை கண்டிப்பாக பின்பற்றுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.
கொவிட் – 19 நோயைத் தடுப்பது தொடர்பாக சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் ஹேமந்த ஹேரத்
மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.