ராமேஸ்வரம் ஜன 02
இலங்கைக்கு கடத்துவதற்காக மண்டபம் அருகே வீட்டில் பதுக்கியிருந்த சுறா இறகு, கடல் அட்டைகள் உள்ளிட்ட 40 லட்சம் மதிப்பிலான பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே வேதாளை கடற்கரையிலிருந்து இலங்கைக்கு கடல் அட்டை, சமையல் மஞ்சள் உள்ளிட்ட பொருட்கள் கடத்த இருப்பதாக கியூ பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைடுத்து, வேதாளை கடற்கரை பகுதியில் கியூ பிரிவு, மண்டபம் போலீசார், மற்றும் மண்டபம் வனத்துறையினர் கூட்டாக அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது, வேதாளை தெற்கு தெருவில் சதாம் எனபவருக்கு சொந்தமான வீட்டில் பதுக்கி வைத்திருந்த தலா 50 கிலோ வீதம் 34 மூடைகளில் 1,700 கிலோ மஞ்சள், தலா 30 கிலோ வீதம் 13 மூடைகளில் 400 கிலோ சுறா இறகு, பதப்படுத்திய கடல் அட்டை 100 கிலோ ஆகிய பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக சதாம் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
ரூ.40 லட்சம் மதிப்புள்ள இப்பொருட்களை வேதாளை கடல் பகுதியில் இருந்து மர்மப்படகு மூலம் இலங்கைக்கு நேற்றிரவு 1/1/2022 கடத்த திட்டமிடப்பட்டிருந்தது விசாரணையில் தெரியவந்ததுள்ளதாக கியூ பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.