புத்தாண்டு தினத்தில் தமிழர் பகுதியில் பெரும் சோகம்! –

முல்லைத்தீவு – முள்ளியவளை காவல்துறை பிரிவிற்குட்பட்ட கேப்பாபிலவு பகுதியில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.

வற்றாப்பளை பகுதியிலிருந்து கேப்பாபிலவு நோக்கிப் பயணித்த உந்துருளி, எதிர்திசையில் பயணித்த பாரவூர்தியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
உந்துருளியில் மூன்று பேர் பயணித்துள்ளனர்.
அவர்களில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் உந்துருளியில் பயணித்த 48 வயதுடைய பிலக்குடியிருப்பு கேப்பாபிலவினை சேர்ந்த கிருஸ்ணசாமி மாரிமுத்து, அதே இடத்தைச் சேர்ந்த 17 வயதுடைய சூரியகுமார் கரிதாஸ் ஆகிய இருவரும் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.

ஆனந்தபுரம் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த 22 அகவையுடைய சண்முகம் நிறோஜன் என்ற இளைஞன் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews