
யாழ்.இணுவில் மத்திய கல்லுாரிக்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த நடைபாதை வியாபாரத்தை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சுன்னாகம் பிரதேசசபை வருமான வரி பரிசோதகர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பிரதேசசபையின் அனுமதியை பெறாது குறித்த நடைபாதை வியாபாரம் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து நடைபாதை வியாபாரத்தை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது.
இதன்போது சம்பவ இடத்திலிருந்த வருமான வரி பரிசோதகர் மற்றும் சுகாதார பரிசோதகர் ஆகியோரை நடைபாதை வியாபாரி அச்சுறுத்தியதாகவும் அங்கிருந்த சுகாதார தொழிலாளியை நடைபாதை வியாபாரி தாக்கியதாகவும்
சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.