இதன்போது நல்லையா கணேஸ்வரன் என்னும் 4ஆம் வட்டாரம், மண்கும்பான் என்னும் முகவரியைச் சேர்ந்த 62 வயதான 8 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்தவராவார்.
மண்கும்பான் பிள்ளையார் ஆலயத்தின் மெய்ப்பாதுகாவலராக பணியாற்றும் இந்த முதியவர் கடந்த 29ஆம் திகதி ஆலயத்திற்கு சொந்தமான மாடு ஒன்றை கட்ட முற்பட்டபோது மாடு முட்டி வயிற்றில் பெரும் காயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் 5 நாள் சிகிச்சை பலனளிக்காது இன்று உயிரிழந்தார்.
உயிரிழந்தவரின் மரண விசாரணையை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.