பருத்தித்துறை சாலை  பேரூந்து மீது கல் வீச்சு….!

நேற்று இரவு பேரூந்து சாரதிகளுக்கும் ஆட்டோ சாரதிகளுக்கும் இடையில் இடம் பெற்ற கைகலப்பு சம்பவத்தின் தொடர்ச்சியாக இது இருக்கலாமென்று பருத்தித்துறை சாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
கல்வீச்சு சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.
இன்று அதிகாலை பருத்தித்துறையிலிருந்து திருகோணமலைக்கான  பயணிகள் போக்குவரத்து  சேவையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பருத்தித்துறை சாலை பேரூந்து மீதே  இத் தாக்குதல் இடம் பெற்றுள்ளது.
இதேவேளை நேற்று இரவு இடம் பெற்ற பேருந்து சாரதிகளுக்கும் பருத்தித்துறை சாலை சாரதிகளுக்கும் இடையில் இடம் பெற்ற கைகலப்பில் இரண்டு பருத்தித்துறை சாலை சாரதிகள் காயமடைந்து பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பெயரில்  நெல்லியடி போலீசார் கைது செய்துள்ளதாகக் நெல்லியடி போலீஸ் வட்டாரம் தெரிவிக்கின்றன.

இதே வேளை குறித்த அசம்பாவிதங்களுடன் கைது சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யாவிடின் பயணிகள் பேரூந்தை சேவையில் ஈடுபடாது பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடப் போவதாக பருத்தித்துறை சாலை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

நேற்று இரவு ஏற்பட்ட முறுகல் நிலையை தொடர்ந்து  நெல்லியடி பஸ் தரிப்பு நிலையத்தில் பருத்தித்துறை சாலை ஊழியர்கள் உரிய நடவடிக்கை ஏடுக்கக் கோரி சில மணிநேரங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடஸடனர். போலீசாரின் தலையிடடால்  ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டிருந்தமையும் தெரிந்ததே

 

Recommended For You

About the Author: Editor Elukainews