கிளிநொச்சி மாவட்டம் பளை பிரதேசத்தில் அமைந்துள்ள பிரதேச பொது வைத்தியசாலையான பளை வைத்தியசாலையில் வைத்தியர்கள் பற்றாக்குறை காரணமாக பிரதேச மக்கள் ப அசெளகரியங்களை ஏதிர்நோக்கி வருவதாக பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
குறித்த வைத்தியசாலையில் தற்போது கட்டிட வேலைகளும் இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமையோடு தளபாடங்கள் மற்றும் மருத்துவ வசதிகளும் குறைவாகவே காணப்படுவதாகவும்.
யாழ் கண்டி பிரதான சாலை அருகே அமைந்துள்ள குறித்த வைத்தியசாலை வீதி விபத்துக்களால் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்க்கு தகுந்த மருத்துவ வசதி இல்லாமையால் கிளிநொச்சி பொது வைத்தியசால அல்லது யாழ் போதனா வைத்தியசாலைக்கு அவர்கள் மாற்றப்படுகின்றனர்.
இதனால் பல இழப்புகள் அதிகளவில் இடம்பபெறுகின்ற என்றும், பல்வேறு வசதி குறைபாடுகளுடன் மருத்துவ மனை காணப்படுகின்றமையாப் பிரதேச மக்கள் தூர இடங்களுக்கு சென்றே மருத்துவ சிகிச்சைகளை பெற்று வருகின்றனர்.
நான்கு மருத்துவர்கள் கடமையில் இருக்க வேண்டிய நிலையில் தற்போதுஒரு வைத்தியரே சேவைய் உள்ளார்.இதனால் உரிய வைத்தியர்களை நியமிக்குமாறும், அவசர தேவைகளுக்கான மருத்துவ வசதிகளை பெற்று தருமாறும் பிரதேச மக்கள் சம்மந்தப்பட்ட தரப்புக்களிடம் கோரிக்கை விதைககின்றனர்.