இன்று யாழ்ப்பாணம் மாதகல் கடல் பரப்பில் சடலமாக மீட்கப்பட்டவரின் தலையில் பலத்த காயம் காணப் படுவதுடன்,அவர் பயணித்த படகின் வெளி இணைப்பு இயந்திரம் சேதமடைந்துள்ளது.இதிலிருந்தே தெரிகிறது படகு வேண்டுமென்று மோதச் செய்யப்பட்டு அடாவடி படுகொலை நிகழ்துள்ளது என்று.இந்த அடாவடியை செய்தவர்கள் கடற்படையினர் என மக்கள் இங்கு தெரிவித்துள்ளனர்.
மீனவர் ஒருவர் விபத்து மூலம் உயிரிழந்தால் 24 மணித்தியாலங்களின் பின்னரே சடலம் கரையொதுங்கும், ஆனால் உயிரிழந்தவரின் உடல் சூடு கூட தணியவில்லை என உறவுகள் தெரிவித்துள்ளனர். இது தவிர இன்னமும் நீதவான் சடலத்தை வந்து பார்வையிடவில்லை.
பதில் நீதவானை அமர்த்திவிட்டு இங்கு வர முடியாத நிலையில் நீதித்துறை உள்ளது.எங்களை நாமே ஆளும் ஆட்சி முறை வேண்டும். இந்த கொலையில் யாரும் சாட்சி சொல்ல மாட்டார்கள்.ஏனென்றால் சாட்சி சொல்பவர்களும் கொலை செய்யப்படலாம் என்ற அச்சம் காணப்படுகிறது என தெரிவித்துள்ளார்.