இலங்கை முதல் உதவி சங்கம், இந்துசமய தொண்டர் சபையினால் பொங்கல் பொருட்கள், பானைகள் வழங்கல்…..!

அறம் அறக்கட்டளை அமைப்பின் தலைமை நிர்வாக இயக்குனர் திரு ம.மதன்ராஜின்  நிதி அனுசரணையில் தெரிவு செய்யப்பட்ட பொருளாதார ரீதியில் பின்தங்கிய மற்றும் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் 100 க்கு 107000/= ரூபா பெறுமதியான பொங்கல் பானைகள், பொங்கல் பொருட்கள் வழங்கும் நிகழ்வு நேற்று இடம் பெற்றுள்ளது.

இலங்கை முதலுதவி சங்க ஆணையாளர் வை மோகனதாஸ் தலமையில் மிருசுவில் வடக்கு பத்திரகாளி அம்மன் ஆலய முன்றலில்  இடம் பெற்ற நிகழ்வில்
மிருசுவில் வடக்கில் 55 குடும்பங்களுக்கும், கொடிகாமம் மத்தியில் தெரிவு செய்யப்பட்ட 15 குடும்பங்களுக்கு ஐயனார் வீதியிலுள்ள  வன்னியர் ஆலய முன்றலிலும், வல்வெட்டித்துறையில் 15 குடும்பங்களுக்கும்,  அச்சுவேலியில் 15 குடும்பங்களுக்குமாக மொத்தம் 100 குடும்பங்களுக்கே இப்  பொங்கல் பானைகள் பொங்கல் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந் நிகழ்வில் அறம் அறக்கட்டளை அமைப்பின் இலங்கைக்கான இணைப்பாளர் சிவத்திரு நவநீதன், இலங்கை முதல் உதவிச் சங்கம், மற்றும்  இந்து சமய தொண்ட சபையின் தேசிய ஆணையாளர் தேசகீர்த்தி வை.மோகனதாஸ்,  இலங்கை முதல் உதவிச் சங்கம் இந்துசமய தொண்டர் சபையின் தேசிய கண்காணிப்பாளர் சமூகஜோதி வை.ஜெகதாஸ், இலங்கை முதலுதவி சங்க வடமராட்சி இனைப்பாளர் சிவத்திரு க.சிவநீதன்,  மிருசுவில் வடக்கு கிராம அலுவலர், சமுர்த்தி உத்தியோகத்தர், வன்னியர் சன சமூக நிலைய உப செயலாளர் உட்பட பலரும் கலந்து கொண்டு வழங்கி வைத்தனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews