தமிழர் திருநாளான
தைப்பொங்கலை முன்னிட்டு அகரம் உதவும் கரங்கள் நலன்புரிச் சங்கத்தினூடாக. “பொங்குவோம் பொங்க வைப்போம்” என்ற பெயருடன் வடக்கு கிழக்கு பகுதிகளில் பல கிராமங்களில் உள்ள நாளாந்த அத்தியவசிய தேவைகளை நிறைவேற்ற முடியாமல் சிரமப்படும் பல குடும்பங்கள் தற்காலத்தில் பொருட்களின் விலையேற்றத்தால் பொங்கலை கொண்டாடுவதற்குரிய பொங்கல்பானை மற்றும் பொங்கல் பொருட்களை வாங்க முடியாமல் வாழும் குடும்பங்களின் அவலநிலையினை அறிந்து அகரம் புலம்பெயர் நல்லுள்ளங்களின் நிதிப்பங்களிப்பின் மூலம் பல குடும்பங்களுக்கு பொங்கல் பானை மற்றும் பொங்கலுக்குரிய பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டது.
இவ் அன்புக்கரம் கொடுக்கும் நிகழ்வினை அகரம் இணைப்பாளர்கள் வீடுகளுக்கு நேரடியாக சென்று வழங்கி வைத்தனர்.
தற்கால சூழ்நிலையில் தமது குடும்பத்தின் வறுமை நிலையை அறிந்து கருணை உள்ளம் கொண்டு உதவிபுரிந்த அகரம் புலம்பெயர் உறவுகளை, உதவியை பெற்றுக்கொண்ட குடும்பங்களும், அகரம் குடும்பமும் நன்றியையும் பொங்கல் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்கள். அகரத்தின் பொங்கல் பானை மற்றும் பொங்கல் பொருட்கள் வழங்கும் நிகழ்வு தொடர்ந்தும் வடக்குகிழக்கு பகுதிகளில் வாழும் உறவுகளுக்கு அன்புக்கரம் கொடுக்கும் பயணம் தொடர்சியாக இடம்பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.