இந்த ஆட்சி ஏற்கனவே கவிழ்ந்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளருமான எம் ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
நேற்று தனது வடமராட்சி தொகுதி அலுவலகத்தில் இடம் பெற்ற தைப் பொங்கல் விழாவில் கலந்து கொண்டபின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது
ஆட்சி ஏற்கனவே கவிழ்ந்து விட்டதாகவே கருதுகின்றேன். இன்று ஆட்சியாளர்கள் இருப்பதாக தெரியவில்லை, ஆனால் இருப்பதாக சொல்லி நாட்டை மென்மேலும் ஒரு இருண்ட யுகத்துக்குள்ளே கொண்டு வருகிறவர்கள், அகற்றப்படவேண்டும் என்பதிலே மாற்றுக் கருத்து கிடையாது தென்னிலங்கையிலே இதற்க்கான எதிர்ப்பு போராட்டங்கள் ஆரம்பமாகியிருக்கிறது.
மக்களாக இந்த போராட்டங்களை நடத்துகிறார்கள், அரசியல் தலைவர்கள் முன்வந்து இந்த மாற்றத்தை செய்வோம் என எதிர்பாரக்கின்றோம் எனவும் தெரிவித்தார்
மேற்படி பொங்கல் நிகழ்வு நேற்று காலை 8:00 மணிக்கு ஆரம்பமாகியது. இந் நிகழ்வில் வடமராட்சி தெற்க்கு மேற்க்கு பிரதேச சபை தவிசாளர் திரு. ஐங்கரன், முன்னாள் மாகணசபை உறுப்பினர் ச.சுகிர்தன், இளைஞர் அணி செயற்பாட்டாளர் திரு தயாபரன் அம்பன் நிதர்சன் மற்றும் நிர்வாகிகள், பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் எஸ் தியாகலிங்கம், உட்பட பலரும் கலந்து கொண்டனர்.