விவசாய அமைச்சு வேண்டுமென்றே பாகிஸ்தானில் இருந்து பீற்றூட்டை இறக்குமதி செய்வதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றிற்க்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது இலங்கை அரசின் விவசாய அமைச்சின் இந்த செயற்பாட்டால் எமது நாட்டு உற்பத்தியாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் அதற்கு தனது கடும் கண்டணத்தை தெரிவிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.