கிளிநொச்சி மாவட்டத்தில் யுத்தகாலத்தில் அழிவுற்ற பொது நூலகம் புதிதாக கரைச்சி பிரதேச சபையினரால் நிர்மாணிக்கப்படவுள்ளது. குறித்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக இந்திய பதில் துணை தூதுவர் மற்றும் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களும், கிளிநொச்சி மாவட்டத்தின் பாடசாலை முதல்வர்கள், கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர், உறுப்பினர்கள், என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் கடந்த காலங்கலில் நாம் கிளிநொச்சி மாவட்டத்தில் இந்தியாவில் ஜெயலலிதா அம்மையார் முதலமைச்சராக இருந்த காலபகுதியில் நாங்கள் குறித்த நூலகம் அமைப்பதற்கு கோரியிருந்தோம். அதற்கமைய அவரும் இந்திய அரசின் அணுசரனையில் நூலகம் அமைப்பதற்கு முன் வந்தார். ஆனால் துரதிஸ்டவசமாக அவர் இறந்து விட்டார். ஆகவே கரைச்சி பிரதேச சபையின் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்படும் கிளிநொச்சி நூலகத்திற்கு புலம்பெயர் தேசத்தில் உள்ளவர்கள் மற்றும் எமது மாவட்டங்களில் இருக்கும் மக்கள் ஒவ்வொருவரும் சிறிய பங்களிப்பு செய்ய வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.