அதிகரிக்கும் சிறுவர் துஸ்பிரயோகங்கள் பாட்டாளிபுரத்தில் விசேட விழிப்புணர்வு நடவடிக்கை முன்னெடுப்பு…..!

அண்மைய நாட்களாக பதிவாகிய ஏழு சிறுவர் துஸ்பிரயோகச் சம்பவங்களைத் தொடர்ந்து பெற்றோருக்கு விழிப்புணர்வூட்டும் செயலமர்வு இன்றைய தினம் பாட்டாளிபுரம் பாமகள் வித்தியாலய கேட்போர் கூடத்தில் இநடைபெற்றது.

இதில் பாடசாலை அதிபர், சம்பூர் பொலீஸ் நிலையப் பொறுப்பதிகாரி, சிறுவர் நன்னடத்தைப்பிரிவு உத்தியோகத்தர், உளவளத்துணை அலுவலர், மற்றும் World vission நிறுவனப் பொறுப்பதிகாரி ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனைகளையும் சட்டம் தொடர்பான தெளிவூட்டல்களையும் வழங்கியதன் பின்னர் மக்கள் சிறுவர் துஸ்பிரயோகச் செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களையும் அதற்கு உறுதுணையாக சட்ட விரோத மது உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபடுவோரையும் கைது செய்து சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்துமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.

எவ்வாறாயினும் சம்பவத்துடன் தொடர்புடையவர்களில் கணிசமான அளவினரைக் கைது செய்துள்ளதுடன் ஏனையோரைக் கைது செய்வதற்கான மக்களின் ஒத்துழைப்பினையும் போலீசார்  கோரியுள்ளனர்.

மிகக் குறுகிய காலத்துக்குள் பதிவாகிய 13,14,15,வயதுடைய திருமணங்களினால் சிறுவர்கள் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டமையானது பாரியளவிலான சமூகச் சீர்கேட்டுக்கான சமிக்கையாக அவதானிக்கப்படுகிறது.

Recommended For You

About the Author: Editor Elukainews