இலங்கையில் தனிநபர் ஒருவர் செலுத்த வேண்டிய கடன் எவ்வளவு தெரியுமா?

தற்போதைய சூழ்நிலையில் இலங்கையர் ஒருவரின் தனிநபர் கடன் சுமார் 800, 000 ரூபாவாக அதிகரித்துள்ளது என்று சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இலங்கை ரூபாவின் தொடர்ச்சியான வீழ்ச்சி மற்றும் டொலரின் விலை அதகிரிப்பு என்பவற்றை கட்டுப்படுத்த முடியவில்லை என்பதை தற்போதைய நிர்வாகம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அமைச்சர் அமரவீர மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும், நாடு அனைத்து துறைகளிலும் சவால்களை எதிர்நோக்கி வருகின்றது.

நாட்டின் வெளிநாட்டுக் கடன் ரூபா 17.2 ட்ரில்லியனாக உள்ளது. 1970ஆம் ஆண்டு சிறிமாவோ பண்டாரநாயக்க பதவியேற்ற போது அமெரிக்க டொலர் ஒன்ிறன் பெறுமதி 9 ரூபாவாக காணப்பட்டது.

1977ஆம் ஆண்டளவில் அதன் பெறுமதி 7 ரூபாவாக குறைவடைந்தது. 1977ஆம் ஆண்டு முதல் அனைத்து அரச தலைவர்களாலும் அரசாங்கங்களாலும் வெளிநாட்டுக் கடனை குறைக்க முடியவில்லை.

அமெரிக்க டொலரொன்றின் மதிப்பு ரூ 200 முதல் 240 வரை உள்ளதால் நாட்டின் டொலர் கையிருப்பு வேகமாக குறைந்துள்ளது. இந்த நிலை எதிர்காலத்திலும் தொடரலாம் என குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: admin