கிளிநொச்சி மாவட்ட பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை பகுதியில் மனித எச்சம் காணப்படுகிறது. மனித நேய கண்ணிவடி அகற்றும் பிரிவினரால் கண்ணி வெடி அகற்றும் போதே இம் மனித எச்சம் காணப்பட்டுள்ளது.
பளை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவானுக்கு தகவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து குறித்த பகுதிக்கு நேற்று (19) சென்ற கிளிநொச்சி மாவட்ட நீதவான் குறித்த பகுதியை பார்வையிட்டிருந்தார்.
நீதவானின் அனுமதியுடன் நேற்று குறித்த பகுதியில் அடையாளப்படுத்தபட்ட இடங்களில் அகழ்வு பணிகள் இடம்பெற்றுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை போலீசார் மேற்கண்டு வருகின்றனர்
முதல் நாளான இன்று வெடிபொருள் எச்சங்களும் மீட்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அகழ்வு பணிகள் இடம்பெறவுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.