இரணைமடுக்குள கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளன பிரதிநிதிகள் இன்று கிளிநொச்சியில் ஊடக சந்திப்பை மேற்கொண்டனர். இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளன மண்டபத்தில் குறித்த ஊடக சந்திப்பு இடம் பெற்றது. குறித்த ஊடக சந்திப்பில்
பசுமை விவசாயத்தால் மூன்றில் ஒரு பங்கு அறுவடை தான் கிடைக்கிறது.
ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட மெற்றிக் தொண் அறுவடை கிடைக்கும். மாவட்டத்தில் 30000 தொண்ணும் கிடைக்கவில்லை.
நஷ்ட ஈடு தருவதாக சொல்லுகின்றனர். நெல்லை 75 ரூபா நிர்ணய விலைக்கு கொள்வனவு செய்வதாக கூறப்பட்டாலும் ஒரு விவசாயிடம் கூட நெல்லை கொள்வனவு செய்யவில்லை
வெளிநாடுகளிலிருந்து இருந்து இறக்குமதி செய்யும் அரிசி உள்ளிட்ட பொருட்கள் நச்சு தன்மையற்றது என்று சொல்ல முடியுமா ?
தங்க நகைகளையும் அடைவு வைத்து விவசாயிகள் மேற்கொண்ட அறுவடை மூலம் அவற்றை மீட்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சேதன பசளை என்றால் அதற்குரிய நெல்லை அறிமுகம் செய்ய வேண்டும்
இந்தியாவில் எவ்வாறு தற்கொலைக்கு ஆளாகினார்களோ அந்த நிலைக்கு போக விடாது நஷ்ட ஈட்டை வழங்க வேண்டும் என்றனர்