
கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி நாதன் குடியிருப்பு பகுதியில் 20.01.2022 நேற்று நள்ளிரவு 11.50 மணியலவில் தாயும் 17 வயது மகளும் தீயில் எரிந்து உருக்குலைந்த நிலையில் சடலமாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக தருமபுரம் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவயிடத்திற்கு விரைந்த தருமபுரம் பொலிசார் அச்சம்பவம் தொடர்பாக மேலதிகவிசாரணைகளை ஆரம்பித்துள் ளனர்.






இச்சம்பவம் கொலையாக இருக்குமா எனும் கோணத்தில் பொலிசார் தீவிரவிசாரணைகளை ஆரம்பித்துள்ளன. இச்சம்பவத்தில் 47 வயதுடைய ஆனந்தராசா சீதேவி எனும் 07 பிள்ளைகளின் தாயாரும், 17 வயதுடைய லக்சிகா எனும் அவரது மகளுமே இவ்வாறு உயிரிந்துள்ளனர்.