மனிதநேய கண்ணிவெடி அகற்றும் தொழில் புரிந்து வந்த நபர் மீது நேற்றைய தினம் 23.01.2022 வாள் வெட்டுச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
தொழில் நிமித்தம் நேற்று அதிகாலை வேலைக்காக புறப்பட்டு சென்றுகொண்டிருந்த வேளை புளியம்போக்கணை சந்திப் பகுதியில் வைத்து இனம் தெரியாத 6பேர் கொண்ட குழுவினரால் சரமாரியான வாள் வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந் நிலையில் படுகாயமடைந்த 28 வயதுடைய புண்ணியமூர்த்தி மோகனவதனன் தருமபுரம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். பின்னர் அங்கிருந்து மேலதிகசிகிச்சைக்காக யாழ் பொதனாவைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் இப்பகுதியில் அன்மைக்காலமாக பல்வேறுவகையான குற்றச்செயல்கள் தற்கொலை , வாள்வெட்டு வழிப்பறிக்கொள்ளை என பல குற்றச்செயல்கள் நடைபெற்றுவருவதால் மக்கள் மத்தியில் பெரும் ,அச்சநிலை தொன்றியுள்ளமை குறிப்பிடத்தக்கவிடையமாகும்