வடமாகாணத்தில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தகவல்கள் தொிவிக்கின்றன.
பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தி தென்னிலங்கை சென்று திரும்பும் பலருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்படுவதாகவும் சுகாதாரத்துறை கூறுகிறது.
யாழ்.போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் இடம்பெற்ற அன்டிஜன் பரிசோதனையில் பலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்றும், நேற்றுமுன்தினமும் இந்த பரிசோதனை இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. தென்னிலங்கை உள்ளிட்ட நாட்டின் பிற பகுதிகளில் கொரோனா அபாயம்
மீளவும் தலைதுாக்கியுள்ள நிலையில் வடக்கிலும் கொரோனா தொற்று அபாயம் அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
விசேடமாக பொது போக்குவரத்தை பயன்படுத்தி தென்னிலங்கைக்கு சென்று திரும்பிய பலர் காய்ச்சலுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர்.
எனவே பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தி தென்னிலங்கை செல்லும் பயணிகள் அத்தியாவசிய தேவைக்காக மட்டும் பயன்படுததுவது பாதுகாப்பானது