
புலோப்பளை கிழக்கில் வீடு ஒன்று தீக்கிரையான சம்பவம் நேற்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த தீ விபத்து சம்பவத்தில் வீட்டில் இருந்த சொத்துக்கள் எரிந்து நாசமாகியுள்ளது.
குறித்த சம்பவத்தில் வீட்டிலிருந்த எவருக்கும் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை என பொலிசார் தெரிவித்தனர்.
வீடு எரிந்துகொண்டிருந்த வேளை பளை பொலிசார் வீட்டினை உடைத்து தீ பரவலை கட்டுப்படுத்தியுள்ளனர்.
மின் ஒழுக்கு குறித்த விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. சம்பவம் தொடர்பில் பளை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.