கிளிநொச்சி தர்மபுரம் மேற்கு மற்றும் கிழக்கு ஆகிய பகுதிகளில் பொது அமைப்பு பிரதிநிதிகளுடனான சந்திப்பு கடந்த 25/01/2022 நடைபெற்றது.
இச்சந்திப்பில் மக்களின் பல்வேறு வகையான தேவைகளையும் கேட்டறியப்பட்டதோடு அவர்களின் குறைகளுக்கான தீர்வினை விரைவில் பெற்றுத்தருவதாகவும் தெரிவித்தார்.
தருமபுரம் வைத்தியசாலை தற்பொழுது புதிதாகஅமைக்கப்பட்டு பல வசதிகளும் இருப்பினும் வைத்தியர் பற்றாக்குறை காரணமாக உரிய சிகிச்சைகளை பெற்றுக் கொள்ள முடியாதுள்ளதாகவும், சாதாரண சிகிச்சைக்கு கூட கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையை மாற்றி தமது வைத்தியசாலைக்கு போதுமான வசதி வாய்புக்களை பெற்றுத் தருவதுடன், தமக்கான வைத்திய சேவையினை தமது பகுதியிலேயே பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்
மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதே வேளை குறித்த வைத்தியசாலையை நம்பி 14ற்கு மேற்பட்ட கிராமக்கள் அப்பகுதியில் இருப்பதாகவும், தெரிவித்ததுடன்
தமது பகுதியில் 1990 ஆம் ஆண்டு விமான தாக்குதலின் போது நீர்த்தாங்கி ஒன்று முற்றாக அளிக்கப்பட்டுள்ளதாகவும், அதனையும் புனரமைத்து மக்களுக்கான குடிநீர் விநியோகத்தை மேற்கொள்ளவும் உதவ வேண்டும் எனவும் குறித்த சந்திப்பில் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.