கச்சதீவு அந்தோனியார் ஆலய திருவிழாவில் பூஸ்டர் டோஸ் செலுத்திய 500 பேருக்கு அனுமதி! இந்திய பக்தர்களுக்கு முற்றாக அனுமதி மறுப்பு.. |

யாழ்.கச்சதீவு அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா  எதிர்வரும் மார்ச் மாதம் 11ம், 12ம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்ட 500 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.

கச்சதீவு திருவிழா தொடர்பான கலந்துரையாடல் யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்றது. இதன்போதே மேற்கண்டவாறு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் இந்தியாவிலிருந்து சுமார் 10 ஆயிரம் பக்தர்கள் அந்தோனியார் ஆலய திருவிழாவில் கலந்து கொள்ள கடந்தகாலங்களில் அனுமதிக்கப்பட்டது.

கொரோனா போிடர் நிலைமை காரணமாக இந்திய பக்தர்களுக்கு இம்முறையும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இலங்கையை சேர்ந்த 500 பேர் மட்டுமே கச்சதீவு திருவிழாவில் பங்கேற்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த எண்ணிக்கையும் மார்ச் மாதம் திருவிழா காலத்தில் சுகாதார பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்படும் சுற்றறிக்கைக்கு ஏற்ப மாற்றப்படவும் வாய்ப்புள்ளது.

அத்துடன் உற்சபத்தில் பங்கேற்கும் அனைவரும் பூஸ்டர் டோஸையும் பெற்றிருக்கவேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது

Recommended For You

About the Author: Editor Elukainews