பாடசாலைகளில் பிள்ளைகளுக்கு இடையில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே காணப்படுவதாக விசேட வைத்திய நிபுணர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டில் அதிகளவான பிள்ளைகள் தொற்றுக்குள்ளாகி இருப்பதாகவும் தெரிவித்தார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், நாட்டில் அதிகளவான பிள்ளைகளுக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.
இவர்களுக்கு வீட்டில் வைத்தோ அல்லது வேறு இடங்களில் வைத்தோ தொற்று பரவியிருக்கலாம்.
பாடசாலைகளுக்கு பிள்ளைகள் சென்று வருவதால் அங்கிருந்து பிள்ளைகளுக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாமென பலர் நினைக்கக்கூடும்.
எனினும் பாடசாலைகளில் பிள்ளைகள் தொற்றுக்கு உள்ளாவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு.
பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ள தற்போதைய சூழ்நிலையில் அதற்குப் பாதிப்பை ஏற்படுத்தாதிருப்பதற்கான பொறுப்பு பெற்றோர் உள்ளிட்ட அனைவருக்கும் இருப்பதாகவும் தெரிவித்தார்.