
இலங்கை முதல் உதவிச்சங்க இந்து சமயத் தொண்டர் சபையின் ஏற்பாட்டில் கிளி/பிரமந்தனாறு மகா வித்தியாலயத்தில் பொங்கல் விழாவும், சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் தங்க பதக்கம் வென்ற இந்துகாதேவியை கௌரவிக்கும் நிகழ்வும் சிறப்பாக நேற்று +28/01/2022) இடம் பெற்றுள்ளது.








சிவகுரு ஆதீன குரு முதல்வரும் , இலங்கை முதல் உதவி சங்க இந்து சமயத் தொண்டர் சபை ஆலோசகருமான தவத்திரு வேலன் சுவாமிகள் திரு முன்னிலையில் பாடசாலை அதிபர் திரு. க.தெய்வராசா தலைமையில் இந் நிகழ்வுகள் இடம்பெற்றன.
முதல் நிகழ்வாக மங்கல விளக்குகளை வணக்கத்திற்குரிய வேலன் சுவாமிகள், இலங்கை முதலுதவி சங்க தேசிய ஆணையாளர் வை.மோகனதாஸ், தேசிய கண்ணாணிப்பாளர் வை ஜெகதாஸ், மகளிர் பிரிவு பொறுப்பாளர் திருமதி ச.கேதீஸ்வரி, உட்பட பலரும் ஏற்றி வைத்தனர்.
தொடர்ந்து பாகிஸ்தானில் இடம் பெற்ற சர்வதேச குத்துச்சண்டை வீராங்கனை இந்துகாதேவிக்கு தேசத்தின் வீர மங்கை எனும் விருதினை இலங்கை முதலுதவிச் சங்கம் வழங்கி கௌரவித்தது.
இந் நிகழ்வில் இலங்கை முதலுதவி சங்கம், இந்து சமயத் தொண்டர் சபை தேசிய ஆணையாளர் சிவத்திரு .வை.மோகனதாஸ், தேசிய கண்காணிப்பாளர் சிவத்திரு.வை.ஜெகதாஸ், மகளீர் பிரிவுப் பொறுப்பாளர் திருமதி.ச.கேதீஸ்வரி, பாடசாலை இந்துமாமன்ற பொறுப்பாசிரியர் .இ. சங்கரன், ஆசிரியர்கள், மாணவர்கள், இலங்கை முதல் உதவிச்சங்க இந்து சமயத் தொண்டர் சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.