
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வத்திராயனிலிருந்து ல் கடலுக்கு சென்று இதுவரை கரை திரும்பாத இருவரையும் தேடும் பணி இன்று இரண்டாவது நாளாகவும் இடம் பெற்றபோதும் இதுவரை எந்தவிதமான தகவல்களும் கிடைக்கவில்லை.



இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது!
கடந்த வியாழக்கிழமை பிற்பகல் கடற்றொழிலுக்கு சென்ற யோசேப் பிரேம்குமார், அருண்குமார் தணிகைமாறன், என்ற இரண்டு மீனவர்களுமே இவ்காணாமல் போயிருந்தனர். இவர்களை தேடும் பணியே இவ்வாறு இடம் பெற்றது.
நேற்றைய தினம் குறித்த மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட்ட சக மீனவர்கள் அவர்கள் தொழிலிற்க்கு பயன்படுத்திய வலைகளை துண்டங்களாக காணப்பட்ட நிலையில் கரைக்கு எடுத்து வந்துள்ளனர்.
குறித்த மீனவர்கள் பாரிய இயந்திர படகில் மோதுண்டு மூழ்கடிக்கப்பட்டிருக்கலாமென உறவினர்கள் அச்சமடைந்துள்ளனர்.