தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்காக வெகுவிரைவில் ஜனாதிபதி தமிழ்க் கட்சிகளுடன் பேச்சு வார்த்தைகளை நடாத்துவார் இதற்கான முயற்சிகள் இடம் பெற்று வருகின்றது என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
நீதி அமைச்சின் ஏற்பாட்டில் நீதிக்கான அணுகல் எனும் தொனிப் பொருளிலான நடமாடும் சேவை யாழ்.மத்திய கல்லூரில் நடைபெற்ற பின்னர் தமிழ்க் கட்சிகள் இந்தியப் பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ளமை தொடர்பில் வெளிவிவகார அமைச்சின் நிலப்பாடு என்ன என்பது தொடர்பாக தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்தியாவிற்கு கடிதம் அனுப்பலாம் அதனை விட எங்களுடைய பிரச்சினைகளை எங்கள் நாட்டிலே தீர்த்துக் கொள்ளவேண்டும் அதுவே சிறந்தது. அரசாங்கத்திலுள்ள ஜனாதிபதி பிரதமர் மற்றும் நாடாளுமன்றத்தில் இப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதுதான் சிறந்தது.
இதற்காகத்தான் நாங்கள் ஒரு வாய்ப்பை உருவாக்க முயற்சிக்கின்றோம் ஜனாதிபதியுடன் தமிழ்க் கட்சிகள் சந்தித்துக் கலந்துரையாடுவதற்கான முயற்சிகளை நாம் மேற்கொண்டுள்ளோம் விரைவில் இந்தச் சந்திப்பு இடம்பெறும்.
ஏற்கனவே நாங்கள் புதிய அரசியல் அமைப்பை உருவாக்குவதற்காக ஆணைக்குழுவின் முன்பே அனைத்துக் கட்சிகளிடம் இருந்து ஆலோசனைகளைப் பெற்றுள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.