தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் 13 வேண்டாம் சமஷடி கோரி ஏற்பாடு செய்த மாபெரும் எதிர்ப்பு பேரணி பல ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். அண்மையில் தமிழ் தேசிய கட்சிகளால் இந்திய பிரதமருக்கு அனுப்பிய கடிதத்திற்க்கு எதிர்ப்பு தெரிவித்தும், 13 திருத்த சட்டத்தின் கீழான மாகாண சபை தமிழர்களுக்கு தீர்வாகது. சமஷ்டி தீர்வை வலியுறுத்தியுமே இன்று இம் மக்கள் போராட்டம் இடம் பெற்றது.
யாழ். நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவு தூபிக்கு அருகில் இருந்து ஆரம்பமாகிய குறித்த போராட்டம் சங்கிலியன் பூங்காவில் நிறைவடைந்து கண்டன கூட்டமும் இடம் பெற்றது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலமையில் இடம் பெற்ற குறித்த மக்கள் போராட்டத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலிருந்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொது அமைப்பு பிரதிநிதிகள், சமூக ஆர்வலரதகள் என பல ஆயிரம் மக்கள் கலந்து கொண்டனர்.
கண்டன உரைகளை தமிழ் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், சட்டத்தரணி ந.காண்டீபன், சட்டத்தரணி க.சுகாஸ், உட்பட பலரும் நிகழ்த்தனர். இதேவேளை இவ் எதிர்ப்பு போராட்டத்தை நடாத்தி விடாது தடுப்பதற்கு ரெலோ, புளொட், தமிழரசு கட்சி, ஈபிஆர்எல்எவ் , உட்பட்ட கட்சிகளும் அரசும் கடுமையான பிரயத்தனம் மேற்கொண்டிருந்த நிலையிலும் சுமார் 5000 க்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொணடிருந்தமை குறிப்பிடதக்கது.