யாழ்.பல்கலைகழக மாணவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் தொடர்பான விசேட கவனத்தை செலுத்துவேன் என நீதி அமைச்சர் அலி சப்ரி கூறியுள்ளார்.
யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது ஊடகவியலாளர் ஒருவரால் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குகே பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் அவர் கூறுகையில், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு இடம்பெற்றுக் கொண்டிருக்கும் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதன்
கொக்குவில் இந்துக்கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வில் வைத்து என்னிடம் தெரிவித்திருந்தார். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பாக விசேடமாக ஆராயும் குழு ஒன்றை
முன்னாள் நீதியரசர் அசோக டீ சில்வா தலைமையில் நியமித்துள்ளோம். ஆகவே குறித்த குழுவின் அறிக்கை கிடைத்ததும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வழக்கு இடம்பெற்றுக் கொண்டிருக்கும்
மாணவர்கள் தொடர்பில் தாம் விசேட கவனம் செலுத்துவேன். என நீதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.