உயர்தர மாணவர்களுக்கு ஓர் முக்கிய அறிவுறுத்தல் –

கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை மண்டபங்களில், இலத்திரனியல் கடிகாரத்தை காட்சிப்படுத்த பரீட்சை நிலைய பொறுப்பதிகாரிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் L.M.D தர்மசேன தெரிவித்துள்ளார்.

இதன்படி, பரீட்சை நிலையங்களிலுள்ள கண்காணிப்பு ஆசிரியர்கள், தமது கடிகாரத்தில், பரீட்சை நிலையத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இலத்திரனியல் கடிகாரத்திலுள்ள நேரத்தை சரி செய்துக்கொள்ள வேண்டும் என அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பரீட்சையின் போது, நேரம் வீணடிக்கப்பட்டதாக எவராலும் குற்றச்சாட்டுக்களை முன்வைக்க முடியாது என அவர் கூறுகின்றார். இதேவேளை, உயர்தர பரீட்சைகளுக்கு தேசிய அடையாளஅட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.

தேசிய அடையாள அட்டை இல்லாத பட்சத்தில், தமது புகைப்படங்களை பாடசாலை அதிபர் உறுதிப்படுத்தி, ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டும் எனவும், அந்த உறுதிப்படுத்திய ஆவணங்களை தாம் முழுமையாக பரிசோதனைக்கு உட்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பரீட்சைகள் தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் அல்லது சந்தேகங்கள் இருக்கும் பட்சத்தில், அது குறித்து அறிந்துக்கொள்ள தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

1911 011 2784208 அல்லது 011 2 784 537 மேலும், பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தின் நேரடி தொலைபேசி இலக்கத்தையும் அவர் வழங்கியுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews