யாழ்.மாவட்டத்தில் ஒரு வயதான பெண் குழந்தை உட்பட 20 பேருக்கும், வடக்கில் 33 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒரு வயதான பெண் குழந்தை மற்றும் 12 பெண்கள் உட்பட 17 பேருக்கும், சங்கானையல் இருவருக்கும்,
தெல்லிப்பழையில் ஒருவருக்குமாக மாவட்டத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.
இதேவேளை வவுனியா மாவட்டத்தில் 4 பேருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 9 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நலையில் வடமாகாணத்தில் 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன