யாழ்.கோண்டாவில் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது வான்முறை கும்பல் தாக்குதல் நடத்திய நிலையில், துரிதமாக செயற்பட்ட கோப்பாய் பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய 3 ரவுடிகளை கைது செய்துள்ளனர்.
நேற்று மாலை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, மோட்டார் சைக்கிளில் வந்த குழு ஒன்று கோண்டாவில் பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் அத்துமீறி நுழைந்ததுடன், வீட்டிலிருந்த பொருட்கள், மற்றும் கதவு, ஜன்னல்களை அடித்து நொருக்கி சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து
சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து விரைந்து செயற்பட்ட கோப்பாய் பொலிஸர் சந்தேகநபர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் யாழ்.வண்ணார்பண்ணை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன்
குறித்த சம்பவம் காதல் விவகாரம் காரணமாக இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ள நிலையில் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.