
எல்லை தாண்டிய இந்திய மீனவர்களை முற்றுமுழுதாக கட்டுப்படுத்த கோரி சுப்பர்மடம் பகுதியில் மீனவர்கள் நடாத்திய போராட்டம் இன்று வடமராட்சி கிழக்கு வத்திராயனில் கடலிற்க்கு சென்று மரணமடைந்த மீனவர்களுக்கு அஞ்சலி செலுத்தலுடன் ஆரம்பமானது. இறந்த இரண்டு மீனவர்களுக்காகவும் பொது ஈகை சுடர் ஏற்றப்பட்டு போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் மெலளுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்
தொடர்ந்து எல்லை தாண்டும் மீனர்களை கட்டுப்படுத்து,
எம்து கடல் வழங்களை அழிக்காதே, உட்பட பல கோஷங்கள் முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டதுடன், கடலில் இறங்கியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.










இதில் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன், எம் ஏ சுமந்திரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன், தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்க மாவட்ட தலைவர் இ.முரளீதரன், இணைப்பாளர் நா.இன்பநாயகம்,மற்றும் உத்தியோகத்தர்கள், மீனவர் சங்க பிரதிநிதிகள் என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டிருந்தனர்
நேற்றைய தினம் வீதியை தடை செய்து போராட்டம் மெஎற்கொள்ள பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் தடை செய்த நிலையில் இன்று தரப்பாள் கூடாரத்தில் வீதியோரத்தில் இ்ப்போராட்டம் இடம் பெற்றது
வடமராட்சி