இலங்கையின் கொரோனா தடுப்பு வேலைத்திட்டம் படு தோல்வியடைந்துள்ளதாக கூறியிருக்கும் இலங்கை தாதியர்கள் சங்கம், 500 தாதியர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாகவும் கூறியுள்ளது.
இது குறித்து சங்கத்தின் செயலாளர் எஸ்.பி.மெதவத்த மேலும் தொிவித்துள்ளதாவது, இவர்களில் கர்ப்பிணி தாய்மார் மற்றும் இரண்டு வயதுக்கும் குறைந்த பிள்ளைகள் இருக்கும் 50க்கும் மேற்பட்ட தாதியர்கள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய வைத்தியசாலையில் மாத்திரம் 200 தாதியருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதுடன் இவர்களில் 21 பேர் கர்ப்பிணி தாய்மார் எனவும் சொய்சா பெண்கள் மருத்துவனையில் 5 கர்ப்பணி தாய்மார் இருப்பதாகவும் கண்டி வைத்தியசாலையில் நான்கு கர்ப்பிணி தாய்மார் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
மீண்டும் பரவி வரும் கொரோனா காரணமாக கர்ப்பிணிகளான தாதிமார் மற்றும் பாலுட்டும் தாய்மாரின் நிலைமை பாரதூரமாக மாறக் கூடும் என்பதால், அவர்களுக்கு விசேட விடுமுறை அனுமதியை வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாகவும் மெதவத்த குறிப்பிட்டுள்ளார்.
தொற்றுக்கு உள்ளான தாதிமார் ஒரு வாரத்திற்கு பின்னர் மீண்டும் சேவைக்கு அழைக்கப்படுவதால், தொற்று பரவுவது மேலும் இலகுவாகியுள்ளது என தெரிவித்துள்ளார்.