
யாழ்.பல்கலைகழக முன்றலில் நேற்றிரவு பொலிஸார் – மாணவர்களிடையே குழப்பமான நிலையேற்பட்டது.
பல்கலைக்கழகத்தின் பிரதான வீதிக்கு அருகாமையில் உள்ள பகுதியில் இலங்கையின் சுதந்திர தினம் கரிநாள் குறிப்பிடப்பட்ட பதாகை ஒன்று காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் 7.30 மணியளவில் கோப்பாய் பொலிசார் முச்சக்கரவண்டியில் குறித்த பதாகை கட்டப்பட்ட இடத்திற்கு வந்து பதாகையை கழற்றி முச்சக்கர வண்டியில் வைத்துள்ளனர்.
இதன்போது அங்கிருந்த மாணவர்களால் எதற்காக பதாகையை கழற்றுகிறீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது. இந்நிலையில் பொலிஸ் தலைமையகத்தில் இருந்து தங்களுக்கு இதனை அகற்றுமாறு பணிப்பு விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது .
இதனையடுத்து மாணவர்கள் பொலிஸாருடன் வாக்குவாதபட்ட நிலையில் உங்களுக்கு பதாகை வேண்டுமெனில் கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு வாருங்கள் என தெரிவித்துவிட்டு மாணவர் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியதும் பொலிஸார் அங்கிருந்து நகர்ந்துள்ளனர்.