
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கக் கோரி கையெழுத்திடும் மக்கள் போராட்டம் இன்று கிளிநொச்சியில் ஆரம்பமானது.



குறித்த நிகழ்வு இலங்கை தமிழரசு கட்சியில் வாலிபர் முன்னணியினால் ஆரம்பிக்கப்பட்டது. இன்று காலை 8.30 மணியளவில் குறித்த ஆரம்ப நிகழ்வு தமிழரசு கட்சியில் வாலிபர் முன்னணியின் கிளிநொச்சி மாவட்ட உறுப்பினர் தனராஜ் தலைமையில் கிளிநொச்சி சேவைச் சந்தை வளாகத்தில் ஆரம்பமானது.
குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், கரைச்சி பிரதேச சபை தவிசாளர் வேழமாலிகிதன், கரைச்சி பிரதேச சபை உறுப்பினர்கள், வர்த்தகர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இதேவேளை பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைதான டிவனியாவின் மகளும் குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு ஒப்பமிட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், கரைச்சி பிரதேச சபை தவிசாளர் வேழமாலிகிதன் ஆகியோர் பயங்கரவாத தடை சட்டத்தின் தாக்கம் தொடர்பில் உரையாற்றியிருந்தனர்.