யாழ்.குடாநாட்டின் கரையோர பகுதிகளில் மீட்கப்பட்ட அடையாளம் காணப்படாத சடலங்களில் ஒரு சடலத்தின் இடது கையில் சிவலிங்கம் பச்சை குத்தப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வடமராட்சி மற்றும் தீவகம் பகுதிகளில் கடந்த வருடம் நவம்பர் மாதம் 27 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 3 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலத்தில் கடற்கரை பகுதிகளில் ஆறு உடல்கள் கரை ஒதுங்கியிருந்தன.
இவை அடையாளம் காணப்படாத நிலையில் கடந்த இரு மாதங்களாக வைத்தியசாலையின் பிரேத அறைகளில் வைக்கப்பட்டிருந்த்து. அவற்றில் 4 உடல்கள் பருத்தித்துறை நீதிமன்ற அனுமதியின் பெயரில் தற்போது பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு மேற்கொண்ட பிரேத பரிசோதனையில் உயிரிழந்த அனைவரும் 40 தொடக்கம் 50 வயதுவரை இருக்கலாம் எனக் கண்டறியப்பட்டுள்ள அதே நேரம் ஒருவரது வலது கையில் சிவலிங்கம் பச்சை குற்றப்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இதன் மூலம் உரியவரை அடையாளம் காண முடியுமா என்பதற்காக பொலிசாரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன் இறந்தவர்களது மேலதிக பரிசோதனைகளிற்காக எலும்பு மாதிரிகளும் பெறப்பட்டுள்ளன