
காதலனின் கத்தி குத்துக்கு இலக்கான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 15 வயது சிறுமி உயிரிழந்த்து கொரோனா தொற்றினால் அல்ல என சிறுமியின் பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
கந்தளாய் – பெரமடுவ கிராமத்தில் வசிக்கும் 15 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் கடந்த 1ம் திகதி காதலனால் கத்திக்குத்துக்கு இலக்காகி இருந்தார்.
அன்றைய தினம் கந்தளாய் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மேற்கொள்ளப்பட்ட கொவிட் பரிசோதனையில் வைரஸ் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் நேற்று அவர் இறந்துவிட்டதாக உறவினர்களுக்கு தம்புள்ளை ஆதார வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், சிறுமியின் மரணம் குறித்து உறவினர்கள் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.
இதுகுறித்து சிறுமியின் உறவினர் ஒருவர் கூறுகையில், கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கூறி உடலை கொடுக்க முடியாது என்று மருத்துவமனை கூறுகிறது.
தகனம் செய்த பிறகு உடலை எப்படிப் பரிசோதிக்க முடியும். நாங்கள் ஆதரவற்ற நிலையில் இருக்கிறோம் என்றார்.