
யாழ்.மாவட்டத்தை தொடர்ந்து கொழும்பில் மீண்டும் இரு சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் அவையும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
மீட்கப்பட்ட சடலத்தில் காயங்கள் அடையாளம் காணப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்வாறு மீட்கப்பட்ட இரு ஆண்களின் சடலங்களில் ஒன்று வெள்ளவத்தை பொலிஸ் பிரவுக்குட்பட்ட முவர் வீதியை அண்மித்த கடற்கரை பகுதியிலிருந்தும் மற்றைய சடலம் இராமகிருஷ்ணா வீதியை அண்மித்த கடற்கரை பகுதியில் இருந்தும் மீட்கப்பட்டன.
65 வயது மதிக்கத்தக்க ஒருவரின் சடலமும், இளைஞர் ஒருவருடைய சடலம் ஒன்றும் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளாக வெள்ளவத்தை பொலிஸார் குறிப்பிட்டனர்.
மீட்கப்பட்ட சடலங்களும் களுபோவில வைத்தியசாலைக்கு உடற்கூறு பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதாகவும் வெள்ளவத்தை பொலிஸார் குறிப்பிட்டனர்