பிரபாகரன் கேட்டதையே நாங்கள் கேட்கிறோம் இந்த விடயத்தில் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர கூறுவது உண்மையே என கூறியிருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன்,
பிரபாகரன் சுயநிர்ணய உரிமையை கோரினார் அதையே தமிழ் தேசியக் கூட்டமைப்பும் கோருகிறது ஏனெனில் அது தமிழ் மக்களுக்கான சர்வதேச உரிமையாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறியுள்ளதாவது,
சுயநிர்ணய உரிமை என்பது அடிப்படையில் மக்களின் அடிப்படை ஆத்ம மூச்சு அதனை எப்படி உபயோகிப்பது என்பது எங்களது கையில்தான் இருக்கின்றது.
இதனால் தற்போது உள்ளக சுயநிர்ணய உரிமையை கேட்கும்போது மறுக்கப்பட்டால் வெளிய சுயநிர்ணய உரிமையை கேட்கும் உரிமையும் உண்டு.
அதனால் வீரசேகர கூறுவதில் உன்மை இருக்கின்றது என்றார். இதனை நாம்கோர முடியும் என உச்ச நீதிமன்றமும் தீர்ப்பளித்துள்ளது.
இவை எவற்றையும் அறியாத வீரசேகர இப்போதுதான் ஆரம்பத்தில் இருந்த அதாவது நாம் சுயநிர்ணய உரிமையை கோருகிட்றோம் என்கின்றார். அதனையே தற்போதுதான் அவர் கண்டு பிடித்துள்ளார் என்றார்