இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் கைப்பற்றப்பட்டு அரசுடமையாக்கப்பட்ட இந்திய இழுவை படகுகள் யாழ்.காரைநகரில் ஏலம் விடப்படவுள்ளது.
குறித்த நடவடிக்கை தொடர்பில் அண்மையில் மருதங்கேணியில் நடைபெற்ற மீனவர் போராட்டத்தின்போது கருத்து வெளியிட்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இழுவைப்படகுகள் ஏலத்திற்கு விடப்படும்போது
கிடைக்கும் பணத்தினை, இந்திய மீனவர்களால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு இழப்பீடாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.அதேபோல, அத்துமீறும் இந்தியப் படகுகளை பிடிக்கவும், இடிக்கவும் குறித்த படகுகள் பயன்படுத்தப்படும் என்றும் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.