பருத்தித்துறை பொது சுகாதார பரிசோதகர் ஆ.ஜெனனகன் றொனால்ட் எழுதிய “என் சுவாசமே” சுகாதார மேம்பாட்டு நூல் வெளியீட்டு நிகழ்வு நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை பருத்தித்துறை எஸ்.எஸ்.மண்டபத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் மாகாண சுகாதார பணிப்பாளர் ஆறுமுகம் கேதீஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டதுடன் சிறப்பு விருந்தினர்களாக கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி க.செந்தூரன் பருத்தித்துறை ஆதார வைத்தியசால பதில் மருத்துவ அத்தியட்சகர் வைத்தியர் வி.கமலநாதன் உட்பட பலரும் கலந்து கொண்டு சிறப்பு,பிரதிகளை பெற்றுக் கொண்டனர்.
முதற்பிரதியை மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் வெளியீட்டு வைக்க பருத்தித்துறை கொமர்சல் வங்கி யின் முகாமையாளர் சார்பாக வங்கி உத்தியோகத்தர் திருமதி தமயந்தி பெற்றுக்கொண்டார்.