யாழ்.சுழிபுரம் – காட்டுப்புலம் பகுதியில் கசிப்பு காய்ச்சிக் கொண்டிருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் 35 லீற்றர் கசிப்பும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பொலிஸார் மற்றும் இராணுவ புலானாய்வாளர்கள் இணைந்து தேடுதல் நடத்தியுள்ளனர்.
இதன்போது வீடொன்றின் பின்னால் கோழிக் கூட்டுக்குள் கசிப்பு காச்சிக் கொண்டிருந்த நபர் கைது செய்யப்பட்டதுடன்,
கசிப்பு காச்சுவதற்காக பயன்படுத்திய உபகரணங்கள், மற்றும் கசிப்பு ஆகியன மீட்கப்பட்டதுடன் சந்தேகநபரை நீதிமன்றில் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.