கிளிநொச்சி மாவட்டம் ஆனைவிழுந்தான் பகுதியில் யுத்த காலத்திற்கு முன் ஊனமுற்றோர் சங்கத்திற்கென காணி ஒன்று வழங்கப்பட்டிருந்தது. குறி த்த காணியில் தற்போது யாழ் கன்னியர் மடம் அடாவடியாக அபகரித்துள்ளது. இது தொடர்பாக நடமாடும் நீதிக்கான நீதி அமைச்சு கிளிநொச்சி வந்தபோது கிளிநொச்சி மாவட்ட ஊனமுற்றோர் சங்க செயலாளர் போய் கதைத்தபோது மகேஸ்வரன் குழுவால் தெரிவிக்கப்பட்ட விடயம் 4 பேர் அவரை கதைக்க விடாமல் செய்து கன்னியர்களின் மாட்டு க்கொட்டிலுக்கு பின்னால் தான் உங்களுக்கு இடம் பார்த்துள்ளார்கள் எனவும் கரைச்சி பிரதேச செயலாளர் தங்களுக்கு அவ்வாறுதான் தெரிவித்ததாக செயலாளரிடம் கூறப்பட்ட.து.
நாம் மாட்டை விட கேவலமானவர்களா??? எங்களுடைய இடம் இல்லை என்றால் ஏன் மாட்டு கொட்டிலுக்கு பின்னால் எமக்கு இடம் பார்த்து உள்ளார்கள். அனைத்து இடங்களிலும் அணுகும் வசதி மாற்று வலுவுள்ள நபர்களுக்கு வழங்க வேண்டும். நாம் உருவாக்கிய எமக்கு சொந்தமானது இடத்தை விட்டு ஏன் மாட்டு கொட்டிலுக்கு பின்னால் தரவேண்டும். யாழ்ப்பாண திருக்குடும்ப கன்னியர்களுக்கு கிளிநொச்சி மாவட்ட நிர்வாகம் ஏன் காணி வழங்க முயற்சி செய்கிறது. நாம் யாழ்ப்பாணத்தில் காணி கேட்டு போராடலாமா என கேள்வி எழுப்பியுள்ளனர்.