
பெண்கள் வாழ்வுரிமைக் கழகத்தின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டம் நேற்று காலை 10 மணியளவில் பழைய மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இடம் பெற்றுள்ளது.


இதன்போது பெண்கள் சிறுவர்களின் உரிமையை பாதுகாத்தல், அதிகரித்து வரும் விலைவாசியை கட்டுப்படுத்தல், உள்ளிட்ட விடயங்களை உள்ளடக்கி பதாதைகளை ஏந்தியிருந் ததுடன், கோசங்களும் எழுப்பப்பட்டன.
தொடர்ந்து குறித்த போராட்டக்குழுவினர் ஏ9 வீதி ஊடாக மாவட்ட செலகம் வரை சென்று கவனயீர்ப்பில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.