மனிதப் பண்பியல்புகளோடு ஆளுமையுள்ள சமுதாயத்தை உருவாக்க வேண்டிய தூர நோக்கில் அறநெறிப் பாடசாலைகள் உள்ளன….! வேலன் சுவாமிகள்.

மனிதப் பண்பியல்புகளோடு ஆளுமையுள்ள ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்க வேண்டிய தூர நோக்கில் அறநெறிப் பாடசாலைகள் அமைந்துள்ளன என்று வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.
யாழ் நெடுந்தீவு செல்லம்மாள் வித்தியாலய வளாகத்தில் சிவன் மானுட மேம்பாட்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில் செல்லம்மாள் ஞாபகார்த்த அறநெறி பாடசாலை மற்றும் செல்லம்மாள் ஞாபகார்த்த முன்பள்ளி ஆகியவற்றிற்கான அடிக்கல் நாட்டு விழா 07-02-2022 அன்று நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக  கலந்துகொண்டு உரையாற்றிய போதே  வேலன் சுவாமிகள்  இவ்வாறு தெரி தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது.
சிறுவர்களுக்கு ஆரம்பக் கல்வியை மேம்படுத்தவும், அறநெறியை போதிப்பதற்காகவும்,  எடுக்கப்படும் இந்த முயற்சி சிறப்பாக அமைய வேண்டும் என்று  இறைவனை பிரார்த்தித்துக் கொண்டு இன்று நமது மண்ணிலேயே சிறுவர்களை, இளம் சந்ததியினரை, நல்ல வழியில் ஆன்மீக ரீதியில், வழிகாட்டி வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்பில் அனைவரும் இருக்கின்றோம்.
எமது பண்பாடு கலை கலாச்சார விழுமியங்களைப் பேனக் கூடிய விதத்தில் மனித பண்பியலோடு ஆளுமையுள்ள ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்க வேண்டிய தூர நோக்கில் இந்த அறநெறிப் பாடசாலைகள் முக்கிய பாகங்களை வகிக்கின்றன.
அந்த வகையிலேயே நெடுந்தீவு மண்ணில் இருக்கக்கூடிய சிறார்களுக்கு எமது பண்பாட்டு கலாச்சார விழுமியங்களை எடுத்துச் செல்லக்கூடிய வகையில் இந்த அறநெறி  பாடசாலை அமையவேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சிவன் மானுட மேம்பாட்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சிவன் மானுட மேம்பாட்டு நிறுவனத்தின் நிறுவனத்தைச் சேர்ந்த கலியுகவரதன், மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் நெடுந்தீவு பிரதேச செயலாளர் சததிய சோதி ,வேலன்சுவாமி, ஓய்வு நிலை விரிவுரையாளரும்  இந்துமகா சபையை சேர்ந்தவரும் கவிஞ்ஞருமான சோ. பத்மநாதன் மற்றும்  சிவன் மானுட மேம்பாட்டு நிறுவனத்தினர் பொதுமக்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்

Recommended For You

About the Author: Editor Elukainews