
இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கைக்கு வருகைதரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தகவல்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்பதற்காக மோடி இலங்கைக்கு வர வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்ய வாய்ப்பு உள்ளார்.
குறித்த தகவலையும் வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இலங்கையுடனான தனது உறவை மேலும் வலுப்படுத்தும் இந்தியாவின் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த விஜயங்கள் அமையவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.