
வடமாகாணத்தில் முழுமையாக கொவிட்-19 தடுப்பூசியை பெற்றுக் கொள்ளாதவர்கள் அதனை மிக விரைவில் பெற்றுக் கொள்ளவேண்டும். என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து ஆளுநர் மேலும் தொிவித்துள்ளதாவது, கொவிட் -19 வைரஸ் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் பொருட்டு அரசாங்கம் தடுப்பூசிகளை வழங்கி வருகிறது.
இதனடிப்படையில் வடமாகாணத்திலும் கொவிட் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுவருகிறது. தற்போது மூன்றாவது பூஸ்டர் தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் இடம்பெற்றுவருகிறது.
ஆகவே இரண்டாம் தடுப்பூசிகளைப் பெறாதவர்கள் விரைவாக தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதோடு இரண்டாவது தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டவர்கள் மூன்றாவது பூஸ்டர் தடுப்பூசி தவறாமல் பெற்றுக் கொள்ளுமாறு
அவர் மேலும் கேட்டுக்கொண்டார்.