வவுனியா பல்கலைகழகத்திற்கு இன்று விஜயம் செய்யும் ஜனாதிபத கோட்டபாய ராஜபக்ஸ பல்கலைகழகத்தை அங்குரார்ப்பணம் செய்துவைக்கவுள்ள நிலையில் பல்கலைகழக வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்ட நினைவுக் கல்லில் இருந்த தமிழ் மொழி கல்வெட்டு திடீரென இடமாற்றப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்திற்கு நுழைவாயில் ஊடாக உட்சென்று பல்வேறு பீடங்களுக்கும் பிரிந்து செல்லும் பிரதான பகுதியில் முக்கோண வடிவில் பல்கலைக்கழகத்தின் பெயருடன் கூடிய கல்வெட்டு காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
வீதியில் இருந்து உட்செல்லும்போது காட்சிக்கு புலப்படும் வகையில் தமிழ் மொழியும், மற்றைய இரு பக்கங்களில் சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
அரச தலைவரின் வருகையை முன்னிட்டு வீதியில் இருந்து பல்கலைக்கழகத்திற்குள் செல்லும்போது பீடங்களுக்கு பிரிந்து செல்லும் பிரதான பகுதியில் தமிழ் மொழியில் காட்சி கொடுத்த கல்வெட்டு அவசர அவசரமாக அக்கற்றப்பட்டு
மறுபக்கம் மாற்றப்பட்டுள்ளதுடன், முன் பகுதியில் சிங்கள மொழி கல்வெட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.